300 கோடி அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியில் மோதப்போகும் விண்கல்!! அவசர எச்சரிக்கை

stonசூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன, இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.

ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே அவ்வாறு தீப்பிடிக்கும் விண்கற்களால் பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை.

இந்த நிலையில் விண்ணில் சுற்றிவரும் மற்றொரு விண்கல் மூலம் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Advertisement

2009 இ.எஸ். என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் சூரிய மண்டலத்தைச் சுற்றி வருகிறது.

15 கிலோ மீட்டர் அகலத்தில் இந்த கல் உள்ளது. அது சுற்றுப்பாதையிலிருந்து சிறிது, சிறிதாக மாறி பூமியின் வட்டபாதைக்குள் வரும் என்றும், அப்போது அது பூமியில் மோதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமியில் மோதும்போது அது 300 கோடி அணுகுண்டுகளின் சக்தியை வெளிப்படுத்தும், இதனால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த விண்கல் எப்போது மோதும் என்று சரியாக கணக்கிட முடியவில்லை, சில ஆண்டுகளில் இந்த மோதல் நடக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.