விசாரணைகளை முடக்க மாணவர்களின் பெற்றோர்களுக்கு பொலிஸார் இலஞ்சம் கொடுக்க முயற்சி

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வைத்து, கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்துவரும் பொலிஸ் அதிகாரிகள், முறைப்பாட்டை வாபஸ்பெற்றுக்கொண்டால் பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததாகத் தெரிவிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள்,

தாம் பொலிஸாரின் சலுகைகளை நிராகரித்துவிட்டதுடன், தமது பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த மாணவர்களான அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பவுண்ராஜ் சுலக்சன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன் ஆகிய மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் 20 ஆம் திகதி இரவு 11.30 அளவில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மாணவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டது முதல், தன்னையும் மகளையும் மற்றும் சுலக்சனின் தந்தையையும் ஒவ்வொரு காவற்துறை அதிகாரிகளும் கையைப்பிடித்து அழைத்துச் சென்று, மாணவர்களின் கொலைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள், இனிமேல் இப்படியொன்றும் நடக்காது” என்று கூறியதாக கஜனின் தாயாரான 61 வயதுடைய நடராசா சறோஜினி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, “சம்மந்தப்பட்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய பொலிஸ் அதிகாரிகள், தாங்கள் செய்த குற்றத்திற்காக அனைத்து செலவுகளையும் ஏற்பதாகவும் தெரிவித்ததாகவும் நடராசா சறோஜினி கூறினார்.

பொலிஸாரின் இந்த சலுகை வார்த்தைகளை தனக்கும் கூறியதாக அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சனின் தந்தை சின்னத்துறை விஜயகுமார் தெரிவித்தார்.

தனது மூத்த மகனும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது மகனும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சுலக்சனின் தந்தை, தனது மகனின் படுகொலைக்கு நீதியைத் தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை இழுத்தடிக்காமல், துரிதமாக விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று அவர்களது நண்பர்களாக பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.dathdath01dath02dath03dath04dath05