லண்டன் ஹரோவில் பொலிசாரின் 3 நாள் முற்றுகை முடிவுக்கு வந்தது- பெற்றோல் குண்டுகளோடு ஒருவர் கைது !

london-northolt-oetrol-bombலண்டன் ஹரோவில் உள்ள நோத் ஹால்ட் என்னும் இடத்தில். தொடர்மாடிக் குடியிருப்பில் தன்னிடம் பெற்றோல் குண்டுகள் உள்ளதாகக் கூறி ஒருவர் நபர் மறைந்திருந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக பொலிசார் குறித்த குடியிருப்பை முற்றுகையிட்டு. அன் நபரோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள். அருகில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்களை பொலிசார் நகர்த்தியும் இருந்தார்கள். 46 வயதுடைய ஜேசன் மத்தியூ என்னும் நபரே இவ்வாறு தனது வீட்டினுள் மறைந்திருந்துள்ளார். தன்னிடம் நாசகார குண்டுகளும். வீட்டை சுற்றி பாரிய பெற்றோல் குண்டுகளும் உள்ளதாக அவர் பொலிசாரிடம் முன்னர் தெரிவித்திருந்தார்.

நேற்று (23) இரவு சுமார் 8.00 மணியளவில் பொலிசார் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவரைக் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. ஆனால் அவர் குறிப்பிட்டதுபோல அங்கே பாரிய அழிவை ஏற்படுத்தும் குண்டுகள் இருந்தனவா என்று தெரியவில்லை. இது தொடர்பாக பொலிசார் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. 46 வயதுடைய ஜேசன் மத்தியூ என்னும் இன் நபர் மன நிலை சரியில்லாதவர் என்றும். அவர் அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.

Advertisement