ரணிலின் நரித்தனம்- சுண்ணாகத்தில் பொலிஸாருக்கு வாள்வெட்டு – அவர்களே நடத்திய ஒரு நாடகம் ?

jaffna-attack-on-police-628x356யாழில் 2 பல்களைக் கழக மாணவர்களை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளமை, வட கிழக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. வழமைக்கு மாறாக சிங்கள இணையங்கள் பல இச்செய்தியை போட்டதால், சில சிங்களவர் மத்தியிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சிங்களப் பொலிசாரும் இராணுவத்தினரும் யாழில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சிங்கள மக்கள் உணரும் நிலை தோன்றியுள்ளது. இதனால் ரணில் அரசு திட்டமிட்டே ஒரு வாள் வெட்டு சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது என யாழ் வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ் சுண்ணாகம் பகுதியில் அதிரடிப்படையில்(கலகம் அடக்கும் பொலிசார்) மீது இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டியுள்ளார்கள் என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இவர்கள் இருவரும் சாதாரண பொலிசார் அல்ல. கலகம் அடக்கும் பொலிசார். நல்ல முன் அனுபவம் இவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்லாது. இவர்கள் தனியாக செல்வது வழக்கம் இல்லை என்பதும் யாவரும் அறிந்த உண்மை. இன் நிலையில் மின்னல் போல வந்த ரவுடிகள் இவர்களை வெட்டிச் சென்றார்கள் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஏன் எனில் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எவரும் இல்லை.
சிங்கள அரசே ஆட்களை செட்-அப் செய்து இவர்கள் மேல் லேசாக வெட்டி விட்டு. தற்போது யாழில் தமிழ் ரவுடிகள் பதிலுக்கு சிங்கள பொலிசாரை வெட்டி விட்டார்கள் என்று கூறி. நிலமையை திசை திருப்ப பார்கிறார்கள் என்றே யாழ் மக்கள் கருதுகிறார்கள்.

Advertisement