சுன்னாகத்தில் ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து தேசிய புலனாய்வுத்துறை பொலிஸ் உத்தியோகத்தர் மீது நேற்றைய தினம் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்காக ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படடுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தக் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட பொலிஸ் அதிரடிப்படைக் குழுவொன்றும் விசாரணைகளுக்காக நியமிக்கப்ட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் சிவில் உடையில் இருந்த என்.ஐ.பீ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டுக் கும்பலால் வெட்டப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

சுன்னாகத்திலுள்ள பிரபல்யமான பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள புடவைக் கடையொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், குறித்த கடை உரிமையாளரை தாக்க முற்பட்ட போது, அங்கிருந்த தேசியப் புலனாய்வுத்துறை அதிகாரிகளான கேகாலையைச் சேர்ந்த 52 வயதுடைய நிமால் பண்டார, மற்றும் பி.எஸ். நவரத்ன ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையிட்டு தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போதே, கொள்ளைக் கும்பல் வாள்களால் தேசியப் புலானாய்வு அதிகாரிகள் மீது சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால் கைகளிலும், தலையிலும் வாள்களால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த தேசியப் புலனாய்வு அதிகாரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையிலேயே, குறித்த வாள்வெட்டுக் கும்பலைத் தேடி சுன்னாகம் உட்பட அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று முதல் பாரிய தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக விசேட பொலிஸ் குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன.jaffna-policesjaffna-polices01jaffna-polices02jaffna-polices03