உரும்பிராய் சந்தியில் இளைஞன் மீது பொலிசார் கடும் தாக்குதல்!

img_0392உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், உறவினர்களுடன் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில், அலைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் தன்னை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த, பொலிஸார் இருவர் தாக்கியதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement

முறைப்பாடு செய்யச் சென்ற இளைஞனிடம், தங்கள் பொலிஸ் நிலைய அதிகாரிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியதுடன் அவ்வாறான மோட்டார் சைக்கிள் எதுவும் தமது பொலிஸ் நிலையத்தில் இல்லை என்று தெரிவித்ததாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸ் நிலையத்தில் இருந்த அனைத்து பொலிஸாரையும் அழைத்து வந்து, இளைஞனை அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறானதொரு முறைப்பாடோ, தகவலோ தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.