சுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவர் சுட்டுப்படுகொலை : சந்தேகநபர் கைது

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ்வாழ் இரு இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தகராறு முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரும் நண்பர்கள் என்பதும் ஒன்றாக வேலை செய்தார்கள் என்றும், குற்றவாளி சுவிஸ்லாந்து காவல்துறையிடம் சரணடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. சுடப்பட்ட நபர் ஆறுமாத குழந்தையின் தந்தையாவார்.

Advertisement

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

கழுத்dnp-schiesserei-neubahnhofunterfu-hrung-solothurn776தில் சுடப்பட்டதால் பலத்த காயம் காரணமாக மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சந்தேகநபருக்கு 46 வயது இருக்கலாம் என்றும் அவரது பெயர் வசி எனவும் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் முன்னர் இலங்கை குடிமக்கள் சிலர் அப்பகுதியில் வைத்து கைகலப்பில் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.73489

7348873487