சுவிட்சலாந்தில் சோலோ மூவி வசி சுட்டு; 6 மாத குழந்தையின் தந்தை பலி

011சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வரும் இந்த வசி என்னும் நபர். இறுதியாக ஒரு தமிழரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துள்ளார். சுவிஸ் நாட்டில் என்ன நிகழ்வு நடந்தாலும் அது தனக்கு கீழ் தான் நடக்கவேண்டும் என்று இவர் நினைப்பது வழக்கம். சுருக்கமாகச் சொல்லப்போனால் செத்தவீடு வீடு என்றால் தான் தான் பிணமாக இருக்கவேண்டும். கல்யாண வீடு என்றால் தான் – தான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒரு பேர்வழி.  இவரே சுவிஸ் நாட்டில் ஐ.பி.சி தமிழ் என்னும் ஊடகத்தின் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். அன்று என்ன நடந்தது என்று பார்போம்.

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக தொழில் புரியும் நீதன் என்பவருடன் நீண்டநாட்களாக முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சோலோ மூவியில் வேலை செய்து தற்சமயம் நீதனுடன் வேலைசெய்யும் தஜி அவர்களும் தங்களின் வியாபாரநிலையத்தின் விசேட விலைக்கழிவு துண்டுப்பிரசுரம் செய்வதற்காக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தவேளையில் அவர்களுக்கு எதிர் புறமாக இருந்த “இனியா” உணவகத்திலிருந்து வந்த வசி ” இந்த இடத்தில (சொலத்துாண்) நீங்கள் விலைக்கழிவு போடமுடியாது என வாய்த்தகராறில் தொடங்கி கைகலப்புவரை சென்றுள்ளார்.pic

இதனை தடுக்க முற்ப்பட்ட அங்கிருந்த இளையோருடனும் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். மேற்தளத்தில் அவருக்கு சொந்தமான கடை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 5 நிமிடம் கழித்து இவர்களை நோக்கி வந்தவர் தனது இடுப்பில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளார். தஜியை சுடுவதற்கு வசி வருவதைகண்டு கார்த்திக் நண்பனை காப்பாற்ற தள்ளிவிட்டார். இதனால் கார்த்திக் பாலேந்திரன் கழுத்தில் சுடப்பட்டு நிலத்தில் விழுந்ததும்,  தஜியை நோக்கியும் சுடத்தொடங்கியுள்ளார் இருந்தும் அதிஸ்டவசமாக அவர்மீது எந்த குண்டுகளும் படவில்லை. நண்பனை சுட முற்பட்டபோது அதைப்பார்த்த கார்த்திக் நண்பனை காப்பாற்றும் போது தோட்ட கார்த்திக் கழுத்தை துளைத்தது. பின்னர் தஜியை நோக்கி சுட்டுக்கொண்டு துரத்திக்கொண்டு சென்றார் வசி. தன்னுயிரை தியாகம் செய்து என்னுயிரை காத்த நண்பா என்று தஜி கதறி அழுததாக தெரியவந்துள்ளது. தஜியை  துரத்திக்கொண்டு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Advertisement

இருப்பினும் கடையை அடித்து சேதப்படுத்திவிட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே தப்பியோடி தலைமறைவாகிவிடடார். பலத்த காயங்களோடு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்தி நேற்று இரவு(புதன் கிழமை) 27.10.2016 ( 7:50 pm ) உயிரிழந்துள்ளார். அதேவேளை தலைமறைவான குற்றவாளி சோலோ வசி கைத்துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் சம்மந்தப்பட்டவரிடம் விசாரணை நடந்துவருவதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவிடப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோலோ “வசி” என்னும் இன் நபர் , தான் அதிக போதையில் இருந்ததால் இது நடந்ததுவிட்டது என சித்தரிக்க முற்பட்டுள்ளார். இருப்பினும் இதனை பொலிசார் ஏற்க்க மறுத்துள்ளார்கள்.

மூளைசாவு அடைந்த கார்த்திக்கின் உடல் முழுவதும் தானம் செய்யப்பட்டுள்ளது. நண்பனின் உயிரையும் காப்பாற்றி, பல உயிர்கள் வாழ தன்னுயிரை தியாகம் செய்துள்ளார். இதனால் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.

capture14908212_10154614562329820_8606360072478516013_n

solo-movies