யாழில் வெடித்த மோதல்!! 30 க்கும் மேற்பட்டோர் கைது….

captureதீபாவளியன்று மல்லாகத்தில் – பலருக்கு காயம்

மல்லாகம் – அளவெட்டி வீதியில் உள்ள நரிஜிட்டான் முகரி என்னும் இடத்தில் தீபாவளி தினமான இன்று 29.10.2016 இரு குழுக்களுக்கிடையில் பெரும் மோதல் ஒன்று மாலை 4 மணியளவில் வெடித்துள்ளது.

மல்லாகம் நீதிமன்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் குறித்த களேபரம் நேர்ந்துள்ளது.

Advertisement

சுன்னாகம் பகுதியில் இருந்து 2 ஆட்டோக்களில் பொல்லுகள், கத்திகளுடன் சென்ற குழுவினருக்கும் நரிஜிட்டான் முகரியில் உள்ள குழுவினருக்கும் இடையிலேயே குறித்த மோதல் ஆரம்பமாகியுள்ளது.

சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த சண்டையை 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ நின்று வேடிக்கை பார்த்துள்ளார்.

களேபரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப் பட்டுள்ளது. இருவரின் தலைகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் காயமடைந்ததாகவும், அவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சண்டையின் முடிவில் வந்த 30 க்கும் மேற்பட்ட தெல்லிப்பளைப் பொலிஸார் ஒரு ஆட்டோவையும், மோதலில் ஈடுபட்ட சிலரையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தனிப்பட்ட பகையே மோதலுக்கு காரணம் என தெரிய வருகிறது.

சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவரின் ஸ்மார்ட் போனை சண்டையில் ஈடுபட்ட குழுவினர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

குறித்த இடத்தில் குழு மோதல் தொடங்கி சில நிமிடங்களுக்குள் பொலிஸார் வரும் சாத்தியம் காணப்படும் அவர்கள் ஏன் உடனடியாக வரவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.