Home மருத்துவம் டெங்கு கொசுக்களுக்கு வீட்டிலேயே மருந்து இருக்கு! ஈஸியான வழிமுறை

டெங்கு கொசுக்களுக்கு வீட்டிலேயே மருந்து இருக்கு! ஈஸியான வழிமுறை

625-0-560-350-160-300-053-800-668-160-90-2மழைக் காலங்கள் தொடங்கி விட்டால் போதும், கொசுக்களின் தொல்லைகள் தாங்க முடியாது.

சளி, இருமல், டெங்கு காய்ச்சல் உட்பட தொற்று நோய்களும் நம்மை அதிகமாக தாக்குகின்றன.

இதற்கு நாம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

கொசுக்கடியில் இருந்து நம்மை காக்கும் மிகச்சிறந்த கிருமிநாசினியாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

எனவே டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க நாம் இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்.
மேலும் நம்மை தாக்கும் டெங்கு கொசுக்களால் அதிக உயரமாக பறக்க முடியாது.

எனவே டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. இதனால் அதற்கு ஏற்றது போல நாம் இரவில் ஆடைகளை அணிந்துக் கொள்ள வேண்டும்.

இதனால் டெங்குக் காய்ச்சல் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படாமல் மிகவும் எளிதாக விடுபடலாம்.