Home சினிமா விஜய் ஆண்டனி கொல்லப்பட்டாரா. சைத்தான் சொல்வது என்ன?

விஜய் ஆண்டனி கொல்லப்பட்டாரா. சைத்தான் சொல்வது என்ன?

download-3சில படங்கள் கொடுத்தாலும் பெரும் நடிகர்களுக்கு நிகராக சினிமாவில் இன்று சாதித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சமீபத்தில் வெளிவந்த அவரின் பிச்சைக்காரன் படமே இதற்கு நல்ல உதாரணம். அடுத்ததாக மிக எதிர்பார்ப்பில் உள்ளது இவரின் சைத்தான்.

இம்மாதம் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்மறையான கதை போல இருந்தாலும் நேர்மறையான கருத்துக்கள் சொல்வது இவருடைய ஸ்பெஷல்.

அந்த வகையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி முன்ஜென்மத்தில் கொல்லப்பட்டதால், அடுத்த ஜென்மத்தில் கடந்த கால பழைய நினைவுகள் அவருக்கு இப்போது தொடர, ஒரு மனோ தத்துவ ரீதியாக கதை நகரும் என இப்படத்தின் இயக்குனர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான், சலீம், பிச்சைக்காரன் என ஆழமாய் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்ட இவர் இப்படத்திலும் முக்கிய விஷயத்தை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.