Home சினிமா ஜி வி பிரகாஷ் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

ஜி வி பிரகாஷ் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

piriya-600x300நடிகர் ஜி வி பிரகாஷ் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் வருகிற நவம்பர் 10 ம் தேதி வெளிவருகிறது கடவுள் இருக்கான் குமாரு.

இப்படத்துக்கு நேற்று தான் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் ரிலீஸ் தேதி வெளிவந்தவுடன் சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இப்படத்தை உருவாக்க தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவிஸ் மதன் என்னிடம் குறிப்பிட்ட பணம் பெற்றிருந்தார், தற்போது மதன் இங்கு இல்லாத காரணத்தால், அம்மா கிரியேஷன் சார்பில் சிவா பெயரிலே இப்படத்தை வெளியிட முயற்சிகள் செய்து வருகிறார்.

இப்படம் வெளிவந்து விட்டால் எனது பணம் கைக்கு வராது. ஆகையால் கடவுள் இருக்கான் குமாறு படத்திற்கு தடை போடுமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.