Home சுவிஸ்லாந்து செய்திகள் தண்டவாளம் மீது பாய்ந்த மோட்டார் சைக்கிள்: பரிதாபமாக பலியான ஓட்டுனர்

தண்டவாளம் மீது பாய்ந்த மோட்டார் சைக்கிள்: பரிதாபமாக பலியான ஓட்டுனர்

captureசுவிட்சர்லாந்து நாட்டில் கட்டுப்பாடின்றி ஓடிய மோட்டார் சைக்கிள் ஒன்று தண்டவாளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் பரிதாபமாக பலியாகியுள்ளர்.

சுவிஸின் சூரிச் நகரில் தான் இந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் 34 வயதான நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

சில மணி நேரத்திற்கு பிறகு Kinkelstrasse என்ற பகுதிக்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் தறிக்கெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள் தண்டவாளத்திற்கு அருகே இருந்து சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் சம்பவம் இடத்திலேயே பலியானார். ஓட்டுனர் மது அருந்தியதால் இவ்விபத்து ஏற்பட்டதா அல்லது மோட்டார் சைக்கிளில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததா என தெரியவரவில்லை. சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.