Home சுவிஸ்லாந்து செய்திகள் கைகோர்த்து நடந்த காதல் ஜோடி: காதலனுக்கு நடந்த விபரீத சம்பவம்!

கைகோர்த்து நடந்த காதல் ஜோடி: காதலனுக்கு நடந்த விபரீத சம்பவம்!

captureசுவிட்சர்லாந்தில் சாலையை கடந்த காதல் ஜோடி மீது கார் மோதி நடந்த விபத்தில் காதலன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூரா மாகாணத்தில் நேற்று நடுஇரவில் ஒரு இளம் காதல் ஜோடி ஒன்று மறுமுனையில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையை கடந்தனர்.

அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று இருவர் மீது பலமாக மோதி விட்டு சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட காதலன் பலத்த காயமடைந்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு மருத்துவரும், ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய காதலி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உயிரிழந்த வாலிபருக்கு 21 வயதே இருப்பதாகவும், காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான கார் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.