Home சமூக சீர்கேடு மதுவை மறக்க முடியாது திண்டாடும் பெண் மற்றும் குடும்பம்!

மதுவை மறக்க முடியாது திண்டாடும் பெண் மற்றும் குடும்பம்!

12034057375_0baee037b4_bகடற்படைசிப்பாய் ஒருவர்  தனது மனைவிக்கு மதுபானத்தை வழுக்கட்டாயமாக குடிக்க கொடுத்தப்படியால் இப்பொழுது அப்பெண்னால் மதுவை மறக்க முடியாது அக் குடும்பமே சீர்அழிவிற்கு சென்றுவிட்டதையடுத்து தமது மனைவியை குடிப் பழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ள பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார் கடற்படை சிப்பாய்.

இந்த சம்பவம வடமத்திய மாகாணம் தம்புத்தேகமவில்  இடம்பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு மது அருந்துவதற்காக பல்வேறு இடங்களுக்கு  செல்வதாகவும் இதனால் குடும்பத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படைச் சிப்பாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

தனது மனைவிற்கு பலவந்தமாக தானே மது அருந்த பழக்கியதாலேயே இந்த நிலையை தனது குடும்பம் அடைந்துள்ளதாக இப்பொழுது வருந்துகின்றார் . பொலிசார் மது அருந்துவதை நிறுத்த எச்சரித்தும் இப் பெண் தன்னால் குடிப் பழக்கத்தை கைவிட முடியவில்லை என  பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆண்களைவிட பெண்கள் குடிப் பழக்கத்தால் முழு குடும்பமே சீர் அழிவிற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதையே இந்த சம்பவம் எடுத்துரைக்கின்றது.