Home நிகழ்வுகள் பிரான்ஸ் இல் வதிவிட உரிமம் அற்ற ஈழத்தமிழர்களுக்கு – அனைவருக்கும் பகிருங்கள் உறவுகளே!

பிரான்ஸ் இல் வதிவிட உரிமம் அற்ற ஈழத்தமிழர்களுக்கு – அனைவருக்கும் பகிருங்கள் உறவுகளே!

frபிரான்ஸ் இல் வதிவிட உரிமம் அற்ற ஈழத்தமிழர்களுக்கு வாழ்விட உரிமம் அளிப்பதா அல்லது நிராகரிப்பதா என்னும் முடிவிற்கான விவாதம் 17/11/2016 அன்று காலை 9 மணி தொடக்கம் பி .பகல் 1.30 வரை கொமிசனில் ( CNDA) 9 நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்றது . ஈழத்தமிழரகளுக்கா பல்லாண்டுகளாக வாதாடிவரும் வழக்கறிஞர்கள் திரு.பிக்குவா திரு.ஜக்மன் வாதாடியுள்ளனர். இவர்களில் பிக்குவா அவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக அன்று தொடக்கம் இன்று வரையாக தமிழர்களுக்கெதிராக நடைபெறும் சகல விடயங்களையும் எடுத்துக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

ஆதாவது இன்று 08/12/2016 வியாழக்கிழமை விவாதத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழர்களுக்கு சந்தோசமான சதகமான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர்கள் முலம் தெரியவந்துள்ளது எனவே பிரான்சில் இனி வரும் காலத்தில் அகதி அந்தஸ்து கோரி இருப்பவர்கள், கோரி நிராகரிக்கப்பட்டு மீள் விசாரணைக்கு அளித்து விட்டு இருப்பவர்கள், மற்றும் இப்போது அகதி அந்தஸ்து கோருபவர்கள் எல்லோருக்கும் நல்லதோர் முடிவாக அமைந்துள்ளது எனவே தாமதிக்காது அகதி அந்தஸ்து இல்லாமல் பல காலம் அவதிபட்டு கொண்டிருக்கும் உறவுகளே உங்களுக்கான சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் உறவுகளே.