Home விளையாட்டு தேசிய ரீதியில் தங்கப் பதக்கத்தினை வென்ற கிளிநொச்சி மாணவி!

தேசிய ரீதியில் தங்கப் பதக்கத்தினை வென்ற கிளிநொச்சி மாணவி!

கிளிநொச்சி மாவட்ட மாணவி ஒருவர் தேசிய ரீதியில் மேசைப்பந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

பருத்தித்துறை மெதடிஸ் சென் மகளிர் கல்லூரியில் 20.12.2016ந் திகதி நடைபெற்ற இப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவியான பாலகிருஸ்ணன் தனுசிகா தேசிய ரீதியில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

இவர் அகிலஇலங்கை ரீதியாக 12வயது பெண்களுக்கான மேசைப்பந்தாட்டப்போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் ஏற்கனவே மாவட்டரீதியாகவும், மாகாண ரீதியாகவும் பதக்கங்களை வென்ற நிலையிலும் தேசிய ரீதியாகவும் வென்று சாதனை படைத்து பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனையாவார்.

மாணவி தனுசிகா கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி கற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.