Home சமூக சீர்கேடு கொழும்பு பஸ் றைவர்கள் பஸ்சை மட்டும் ஓட்டவில்லை!! பெண்களின் வித்தியசமான காதல்

கொழும்பு பஸ் றைவர்கள் பஸ்சை மட்டும் ஓட்டவில்லை!! பெண்களின் வித்தியசமான காதல்

கொழும்பு யாழ் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களை மடக்கும் சிங்களச் சாரதிகள் – கற்புடன் சொத்தையும் தாரை வார்க்கும்  தமிழ்ப் பெண்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பெண்களில் சிலர் தாங்கள் பயணிக்கும் பஸ்களின் சாரதிகள் எய்யும் மன்மத அம்புக்கு இலக்காகி பலியாகி வரும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த பஸ்களில் பெருமளவானவை தமிழர்களுக்குச் சொந்தமானதாக உள்ளது. ஆனால் அவற்றின் சாரதிகள் சிங்கள பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.  கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கு இடையில் ஏற்படும் பொலிஸ் தொல்லைகள் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்கு தமிழ்ச் சாரதிகளை விட சிங்களச் சாரதிகள் சமார்த்தியமாக சமாளிப்பார்கள் என்ற நோக்கிலேயே பஸ் முதலாளிகள் இவர்களை தங்கள் பஸ்களுக்கு சாரதிகளாக நியமிக்கின்றார்கள்.

இவ்வாறு நியமிக்கப்படும் சாரதிகள் தாங்கள் செலுத்தும் பஸ் தங்களுக்குச் சொந்தமானது என நினைத்தே பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். குறித்த சாரதிகளில் பெரும்பாலானோர் திருமணம் முடித்த குடும்பஸ்தர்கள் ஆவா். இவர்கள் தாங்கள் செலுத்தும் பஸ்களில் பிரயாணத்தை மேற்கொள்ள வரும் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துகின்றது எப்படி என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.

சில இடங்களில்  குறித்த பஸ் சாரதிகள் கொழும்பு செல்லும் பெண் பயணிகளை அவர்களது வீட்டுக்கு அருகிலேயே சென்று ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறான நேரத்தில் பஸ்சில் முற்பதிவு செய்யும் போது குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கம் பஸ்சாரதிக்கு வழங்கப்படுகின்றது. அத்துடன் அவனது இலக்கம் பெண்ணுக்கு வழங்கப்படுகின்றது. பெண்ணின் இடத்தை அறிவதற்காகவும் பஸ் எந் நேரம் தனது இடத்திற்கு வரும் என்பதை அறிவதற்காகவும் வழங்கப்படும் தொலைபேசி இலக்கமே பஸ் சாரதியின் மன்மத விளையாட்டுக்கு துாண்டுகோலாக அமைகின்றது என தெரியவருகின்றது.

தொலைபேசி இலக்கங்கள் பகிரப்பட்ட பின்னர் குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவதற்கும் தமது பஸ்சையே பதிவு செய்யவேண்டும் என கொச்சைத் தமிழில் நகைச்சுவையுடன் பேசி பெண்ணுடனான தொடர்பு ஆரம்பிக்கப்படுகின்றது. அதன் பின்னர் இவ்வாறான தொடர்ச்சியான தொலைபேசி தொடர்பாடல்கள் மூலம் கொழும்பு சென்ற பெண்ணை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பஸ் சாரதி பகீரத முயற்சி எடுத்து குறித்த பெண்ணை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவான்.

இதற்காக பல்வேறு பொய்களை சாரதிகள் அவிழ்த்துவிடுவதும் உண்டு. சிலவேளை குறித்த பஸ்சின் முதலாளியே நான்தான் என்றும் சில சாரதிகள் சொல்லிவிடுவார்கள்.

குறிப்பாக பணக்காரக் களையுடன் அழகான தோற்றம் கொண்ட கொழும்புக்கு அடிக்கடி செல்லும் பெண்களை மடக்குவதில் இவ்வாறான சிங்களச் சாரதிகள் குறியாக இருப்பதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் ஒரு யுவதி இவ்வாறான சிங்களச் சாரதியான திருமணம் முடித்த நபருக்கு பத்துலட்சம் பெறுமதியான கார் ஒன்றை வாங்கிக் கொடுத்து ஏமாந்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த யுவதி வங்கியில் தனது பெயரில் இருந்த பணம் மற்றும் நகைகளை அடவு வைத்தே காதல் பணத்தை என்ற போர்வையில் சிங்களச் சாரதியிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். குறித்த யுவதி மட்டுமல்ல ஏராளமான பெண்கள் இவ்வாறு சாரதிகளிடத்தில் தங்களையும் தங்களது சொத்துக்களையும இழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏமாற்றிய சாரதிகள் பற்றி பொலிசாரிடமும் முறைப்பாடுகள் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சாரதிகளிடம் மிகவும் அறிவுள்ள குறிப்பாக தென் பகுதி பல்கலைக்கழகத்தில் மிகவும் நுட்பமான பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவிகள் சிலரும் மயங்கி தங்களது வாழ்க்கையைத் தொலைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

பட்டமளிப்பு முடிவடைந்து திருமணம் பேசும் போது தனக்கு மேல் தகுதி உள்ள கணவனைத் திருமண சந்தையில் தேடும் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் குறித்த பெற்றோர்களின் பெண்கள் இவ்வாறன சாரதிகளிடத்தில் தங்களை இழந்து வருகின்றது வேடிக்கையான ஒன்றாகவே கருதப்படுகின்றது.

அண்மையில் யாழ் தனியார் பஸ் நிலையத்தில் ஒரு சிங்களச் சாரதி பஸ்சின் திசை திருப்பியை (steering wheel) மிகவும் சிரமப்பட்டு பஸ்சையே தனது கையால் துாக்கித் திருப்புவது போல் திருப்பிய போது குறித்த பஸ்சில் பிரயாணம் செய்த வயது முதிர்ந்த சாரதியான தமிழர் ஒருவர் ‘ஏன் தம்பி பக்கத்தில தமிழ் பெட்டை பாத்துக் கொண்டு இருக்கிறாளோ‘ ? ஏன் இப்புடி steering wheel ஐ படாத பாடுபட்டுத் திருப்புறாய்” என்டு நக்கல் அடித்ததாகத் தெரியவருகின்றது.

வாகனம் ஓட்டுவது என்பது சைக்கிள் ஓட்டுவதை விடவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை விடவும் சுலபமானது. ஆனால் அதையே பெரும் கஸ்டமான காரியம் என நினைத்து பெண்களுக்கு ‘சீன்‘ போடுவது ஏன் என சில வாகன சாரதிகளிடம் கேட்ட போது அதற்கு அவர்கள் சொன்ன பதில் ‘இப்படிச் செய்தால் மாத்திரமே எந்த வாகனமும் எங்களிடம் தானாக வந்து  ஓட்ட கேட்கும் ‘ என பதிலளித்துள்ளார்கள்.

இது கொழும்பு யாழ் பஸ் சாரதிகளுக்கு மாத்திரமல்ல யாழ்ப்பாணத்தில் ஓடுகின்ற அனைத்து பயணிகள் பஸ்சாரதிகளுக்கும் பொருந்தும்.