Home வவுனியா செய்திகள் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் திறப்பு!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் திறப்பு!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் இன்ற 06-01-2017 வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.
மாலைபோட்டு பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
வரவேற்பு நடனத்தை பூந்தோட்டம் பாடசாலை மாணவிகள் நடத்தியிருந்ததுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது
நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ராதாகிருஸ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா, மற்றும் அசிரியர் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்..