யாழ் போதனா வைத்தியசாலையில் இப்படி ஒரு தியாகம்…

யாழில் மூளைச்சாவடைந்த நபர் ஒருவருடைய சிறுநீரகங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அதனை வேறொரு நபருக்கு பொருத்துவதற்காக கொழும்புக்கு கொண்டுசென்றுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இருந்து உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் றுவான் திஸ்ஸநாயக்க தலைமையில் வைத்தியர் பிரசாட் ஹேரத், வைத்தியர் ரஜித்தா பெர்னாண்டோ, வைத்தியர் ஹரிந்ர டீ சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்குறித்த அறுவைச்சிகிச்சையினை நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டுள்ளனர்.
மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் (65வயது) விபத்தின் போது படுகாயமடைந்த நிலையில் மூளைச்சாவடைந்துள்ளார். அவருக்கு செயற்கைச்சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய சிறுநீரகங்கள் நல்ல நிலையில் பேணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அவரின் உறவினர்களுடைய முழு சம்மதத்துடன் நேற்றைய தினம் அவருடையை இரு சிறுநீரகங்களும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக அகற்றப்பட்ட சிறுநீரகங்கள் வேறு ஒரு நபருக்கு பொருத்துவதற்காக நேற்றைய தினம் கொழும்புக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது

Advertisement