யாழில் பொலிஸார் சுற்றிவளைப்பு..! ஐந்து இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் போது ஐந்து இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் அண்மை காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவலைப்பை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.