Home வவுனியா செய்திகள் வவுனியாவில் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம்!

வவுனியாவில் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம்!

வவுனியா பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், ஐக்கிய  விளையாட்டுக்கழகத்தின் செயலாளர்  திரு ரஜீவ் தலைமையில்  இன்றையதினம்(07/01/2017) மாலை 5.30மணிக்கு தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க  மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு   வெகு சிறப்பாக நடைபெற்றது.
இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்சன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ் நிகழ்வில், 32 தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வுகளின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.