அப்பாவை வீட்டுக்குள் அனுமதிக்காத மகள்! கொட்டில் என்ற பெயரில் கொடுமை! பளையில் சம்பவம்!!


யாழ் மாவட்டம் பளைப்பகுதியில் வீட்டு உரிமையளராகிய பெண் ஒருவர் தனது தகப்பனாரை மலசல கூடம், கோழிக்கூடு மற்றும் கழிவு கொட்டும் கிடங்குக்கு அருகாமையில் கொட்டில் என்ற பெயரில் சில கிடுகுகளால் வேயப்பட்ட குடிலுக்குள் விடப்பட்டுள்ளார்.
இச்செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த அக்கிராமத்தவர் ஒருவர்
குறித்த பெண்ணுக்கு அரசினால் காணி வழங்கப்பட்டு அரசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் 7 இலட்சத்து 85000 ஆயிரம் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்பட்டுள்ளதுடன் ஐ.எம்.ஓ நிறுவனத்தினால் வாழ்வாதாரத்திட்டமும், யப்பான் நிறுவனமான யென் நிறுவனத்தால் விவசாயக் கிணறும் குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அறைகள்,விறாந்தை சமையல் கூடம் அடங்கிய 21×27 அளவுடைய வீட்டில் தகப்பனாருக்கு இடம் கொடுக்க மனதில்லாத மகள் அப்பாவுக்கு அமைத்து கொடுத்த குடிலுக்குள் கடும் குளிரிலும், சுட்டெரிக்கும் வெய்யிலிலும் அந்த வயதானவர் அவதிப்படுவதாகவும் அவரை இக்கொடுமையிலிருந்து காப்பாற்றி வயோதிபர் இல்லத்தில் சேர்க்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.

Advertisement