Home நிகழ்வுகள் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டல்

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டல்

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பால் மற்றும் தெங்குசார் உற்பத்தியை அதிகரிப்பதற்காக குருநாகல் பன்னல பிரதேசத்தில் நிர்மா ணிக்கப்படவுள்ள புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்நாட்டப்பட்டது.

இந்த வைபவத்தின் போது நெஸ்லே லங்கா நிறுவனத்தின் வர்த்தக மட்டத்திலான மிகச் சிறந்த பாற்பண்ணையாளர்களை பாராட்டும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசில் மற்றும் சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்ககப்பட்டன.

தெங்கு பயிர்ச்செய்கை சபை, நெஸ்லே லங்கா நிறுவனத்துடன் இணைந்து தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் சில பண்ணையாளர்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா, நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்தவ பணிப்பாளர் திருமதி ஷிவானி ஹெக்டே கூட்டு செயற்பாட்டு உபதலைவர் பந்துல எகொடகே உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்