தேசிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையற்ற ஓர் சந்தர்ப்பம்

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக்குழு – கல்வி அமைச்சு

நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் க.பொ.த (உ.த) சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலமொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1(அ) தரத்திற்குப் பட்டதாரிகளை ஆட்சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப்பரீட்சை – 2017

கல்வித் தகைமை :

Advertisement

இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்புக்கு அமைய அன்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டியதுடன்,விண்ணப்பிக்கும் பாடமானது பட்டப்படிப்பில் பிரதான பாடமாகத் கற்றிருப்பது கட்டாயமானதாகும்.

குறிப்பு.- தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞான பாடத்திற்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் பௌதிக விஞ்ஞானப் பாடத்தைப் பட்டப்படிப்பில் பிரதான பாடமாக கற்றிருக்க வேண்டியதுடன், உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பாடத்திற்காக விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் விவசாய விஞ்ஞானப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் தொழிநுட்ப பாடத்துக்காக விண்ணப்பிக்கின்ற பட்டதாரிகள் தொழிநுட்பவியல், இயந்திரவியல், நிர்மாணவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் முதலிய துறைகளுக்குரிய பட்டமொன்றை பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கில மொழி மூலம் விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் ஆங்கில மொழி மூலப் பட்டத்தைத் கற்று பெற்றிருத்தல் அல்லது ஆங்கில மொழியைப் பட்டப்படிப்பின் பிரதான பாடமாகத் கற்றிருத்தல் வேண்டும்.

இலங்கை ஆசிரியர் சேவை நியதிக்கு அமைய கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

குறிப்பு.- பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் உள்நாட்டு க.பொ.த. (சா.த) பரீட்சை மற்றும் அதற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயதெல்லை.- 13.02.2017 ஆந் திகதியன்று 18 வயதை விடக் குறையாது மற்றும் 35 வயதை விட மேற்படாது இருத்தல் வேண்டும்

விண்ணப்ப முடிவு திகதி 2017.02.13

மேலதிக தகவல்களை 2017 . 01.20ஆம் திகதி வர்த்தமானப் பத்திரிகையில் பார்க்கலாம்