Home சமூக சீர்கேடு மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரின் சகோதரர்

மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியரின் சகோதரர்

மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவரின் சகோதரர் பெற்றோரின் முறைப்பாட்டினை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை குறித்த மணவி ஆசிரியர் ஒருவரிடம் பிரத்தியோக வகுப்பிற்கு சென்றுள்ளார். சம்பவம் நடைபெற்ற தினமன்று குறிப்பிட்ட ஆசிரியர் மாணவிகளிடம் பயிற்சிகளை கொடுத்துவிட்டு தனது வேலைகாரணமாக வெளியில் சென்றுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த ஆசிரியரின் சகோதரர் மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

இதனை எடுத்து குறிப்பிட்ட சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது