Home சினிமா மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் பெயர் மாற்றம்!!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் பெயர் மாற்றம்!!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி, ருக்மிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை மணிரத்னம் தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலமாக தயாரித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் `காற்று வெளியிடை’ படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் பிப்ரவரி 3-ல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், `காற்று வெளியிடை’ தெலுங்கு படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் படத்தை `செலியா’ என்ற பெயரில் படக்குழு வெளியிடுகிறது. முன்னதாக இப்படத்திற்கு `டூயட்’ என பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இப்படத்தை தில் ராஜு வெளியிடுகிறார்