Home பல்சுவை வயிற்றை வெட்டி தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்கள்

வயிற்றை வெட்டி தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்கள்

சாமுராய் என்ற பெயரை கேட்டாலே பயமறியாத வீரன் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

சாமுராய் இனத்தினர் தங்களை அழிக்க வந்த எதிரிகளை எதிர்த்து போராடுவதில் பலம் வாய்ந்தவர்களாக இருந்தது மட்டுமல்லாமல் கடினமான ஒழுக்கநெறிகளையும் பின்பற்றி வாழ்ந்து வந்தனர்.

வாளுடன் வாழ்ந்த நாம், வாளோடு மண்ணில் இறக்க வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள் ஆகும்.

ஜப்பானில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர்.

சாமுராய்களின் மிகப்பிரபலமான போர், தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ குத்தி தற்கொலை செய்துகொள்வார்கள்.

இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர்.

இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது, அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.

அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே இந்த முறை ஆகும்.

ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது போன்றவை சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஆகும்.

அதிகமாக போர்களில் கலந்துகொண்டு எதிரியை வீழ்த்தும் திறமை கொண்ட இவர்கள், 16 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் அதிகமான போரில் ஈடுபட்டன. அதன்பின்னர் காலப்போக்கில் போர்களில் பங்குபெறுவதை இவர்கள் குறைத்துக்கொண்டனர்.

சாமுராய் மக்கள் எந்த அளவுக்கு பிரபலமானவர்களோ, அதே அளவு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களும் பிரபலமானவை.

மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட வாள்கள், ஈட்டிகள் மற்றும் போரின் போது இவர்கள் பயன்படுத்தும் ஆடைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை