கொழும்பு நகர எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மாணவ மாணவிகள் பாடசாலை வளாகத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அருகில் உள்ள மற்றைய மாணவர்கள் அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்பட்டுள்ள காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
தற்போது இந்த காணொளியை அதிகளவானோர் பார்வையிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக்காரணம் அது தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள இணை கலாச்சாரத்தின் செல்வாக்குஎன ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் அறிவியல் குறித்த ஆய்வு பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.