Home கனேடிய செய்திகள் கனடாவில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க-கனேடிய எல்லையை கடந்து கனடாவில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் மாத்திரம் 1,222 பேர் கியூபெக் மாகாணத்தினுள் சட்டவிரோதமாக உள்நுழைந்து அகதிக் கோரிக்கையை முன்வத்துள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை இதற்கு முன்னைய வருடத்தின் எண்ணிக்கையைப்போன்று ஐந்து மடங்கு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடிவரவு சட்டங்களை இறுக்கமடையச் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாக்குறுதி, அகதிகளை அரவணைக்கும் கனடாவின் மனப்பாங்கு என்பனவே இத்தகைய அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என குடிவரவாளர் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், கியூபெக் எல்லையூடாக கனடாவை வந்தடைபவர்களில் சிலரே அமெரிக்கக் குடிமக்கள் என்றும் ஏனையோர் எரித்ரியா, சிரியா, சூடான், யேமன் மற்றும் உள்நாட்டுப் போரால் அழிவுற்ற மற்றும், பொருளாதார பேரழிவால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.