இரண்டு ஆணியடிக்கும் சுத்தியல் வைத்திருந்ததற்காக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்! விக்ஸ் காட்டுப்புகுதி மக்கள் குற்றச்சாட்டு!(போட்டோ வீடியோ)


இரண்டு ஆனியடிக்கும் சுத்தியல் வைத்திருந்தமைக்காக வனத்துறையினர் இரு குடும்பஸ்தர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக வவுனியா விக்ஸ் கிராமத்து மக்கள் அரசாங்க அதிபரிடம் முறையிட்டனர்.

வவுனியா பாரதிபுரம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காட்டுப்பகுதியில் குடியிருக்கும் 47 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கு அக்காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக போராடிவரும் நிலையில் அவர்களது காணிகளை பார்வையிடச் சென்ற வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், றோகண புஸ்பகுமார மற்றும் பிரதேச செயலாளர் கா.உதயராசா ஆகியோரிடமே மேற்படி குற்றச்சாட்டு கிராமத்தவர்களால் முன்வைக்கப்பட்டது.

இதன்போது அருகிலிருந்த வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தாலே வழக்கு பதிவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.

கடந்த ஒன்பது வருடங்களாக இப்பகுதியில் குடியிருக்கும் எங்களை அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரிலேயே வனத்துறையினர் அகற்றுவதற்கு முயற்சி செய்வதுடன் எங்கள் மீது பொய் வழக்குகளை சோடித்து வருகிறார்கள் என்று கிராமவாசிகள் மேலும் தெரிவித்தனர்.