5 பொலிஸாருக்கும் மார்ச் 09 வரை விளக்கமறியல்!!

யாழ்.பல்கலைக்கழக  மாணவர்கள் இருவரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி. சிவலிங்கம்  உத்தரவிட்டுள்ளர்.
யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு  யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும்  நடராஜா கஜன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பொலிஸாரினால் சுடப்பட்டு உயிரிழந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை இன்று (23) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது, குறித்த  5 பொலிஸாரையும் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.