பாவனா மானபங்க விவகாரம்: இணையதளத்தை குற்றஞ்சாட்டும் விவேக்..!!

‘சித்திரம் பேசுதடி’, ‘வெயில்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘அசல்’ ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி மானபங்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனாவை மானபங்க படுத்தியவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்று பல்வேறு சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் பாவனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன், இதுபோன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும், பாவனா நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.