சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் மற்றும் பணிக்காக சென்றுள்ள வெளிநாட்டினர்கள் பயன்பெறும் வகையில் அந்நாட்டுக்குரிய பல்வேறு அவசர சேவைகளின் தொலைப்பேசி எண்கள் இதோ!

தேசிய அவசர தொலைப்பேசி எண்கள்

காவல் துறை – 117

தீயணைப்பு துறை – 118

அவசர ஆம்புலன்ஸ் சேவை – 144

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உதவி எண் – 147

விஷம் தொடர்பான அவசர எண் – 145

ரீகா ஹெலிகொப்டர் சேவை – 1414/ 11 333 333 333

உளவியல் தொடர்பான உதவி எண் – 143

மலையேற்ற விபத்துக்கான அவசர மீட்பு எண் – 1415

பணியில் உள்ள மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்பவர்களின் எண்(24/7) – 0848 133 133

கால்நிலை தொடர்பான விவரங்களுக்கு – 162

சாலை போக்குவரத்து தொடர்பான தகவல்களுக்கு – 163

கார் பழுதானால் உதவிக்கு அழைக்க வேண்டிய எண்(TCS) – 140

பனிச்சறிவு தொடர்பான தகவல்களுக்கு – 187

இதுமட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏதாவது உயிர் காக்கும் அவசிய தேவை என்றால் 112 என்ற எண்ணை எப்போது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம். இச்சேவைகள் அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.