Home விளையாட்டு என் தலைமையில் கிடைத்த சிறந்த வெற்றி இதுதான்: விராட் கோலி

என் தலைமையில் கிடைத்த சிறந்த வெற்றி இதுதான்: விராட் கோலி

என்னுடைய கேப்டன்ஷிப்பில் இந்தியா பெற்ற சிறப்பான வெற்றி இதுவாகும் என்று கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த வெற்றிக்குப் பிறகு கேப்டன் கோலி பேசியதாவது:

தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை, எனது கேப்டன்ஷிப்பிலேயே இந்தியா பெற்ற சிறந்த வெற்றியாக கருதுகிறேன்.

இதன் மூலம் எந்தவொரு நிலையில் இருந்தும் வெற்றியை நோக்கி முன்னேறுவோம் என்பதை வெளிக்காட்டியுள்ளோம்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை வெல்வதில் உறுதியாக உள்ளோம். அடுத்து வரும் போட்டியை எதிர்நோக்கியுள்ளோம்.

டி.ஆர்.எஸ் ரிவியூ கேட்கும்போது தான் சிந்திக்காமல் அவ்வாறு செயல்பட்டதாக ஸ்மித் கூறியுள்ளார்.

ஆனால், 2 முறைக்கும் மேலாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வாறு செயல்படுவதை பார்த்திருக்கிறேன்.

அந்தவகையில், அவர்கள் சிந்திக்காமல் செயல்படுவதாகத் தெரியவில்லை. வேண்டுமென்றே செய்வதாகத் தெரிகிறது என்றார்.