கர்ப்பிணிப் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவம்!

முல்லைத்தீவு A35 பிரதான வீதி வழியே இராணுவ வீரர் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணுடன் இன்று மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளர்.

இந்த பயணக் காட்சியானது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளுடன் கூடிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இராணுவ சீருடையுடன் சென்றவர் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

Advertisement

மேலும் விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலி போராளி ஒருவர் விடுமுறையில் வீடு சென்றால் அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையான பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் நியமச் சீருடை (வரிஉடுப்பு) அணிந்தபடி உடன் பிறந்த சகோதரியைக் கூட அழைத்து பயணிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இறுக்கமாக காணப்பட்டதை பொதுமக்கள் மீட்டிப் பார்க்கின்றனர்.