Home விளையாட்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காள தேச அணியில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு

வங்காள தேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நாளை தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 25-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய லெஃப்ட் ஆர்ஃம் சுழற்பந்து வீச்சாளர் சன்ஷாமுல் இஸ்லாம் புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உள்ளூர் தொடரில் கடந்த ஐந்து சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த தொடரில் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். மேலும் ஓரளவிற்கு பேட்டிங்கும் செய்வார் என்பதால் இவரைத் தேர்வு செய்துள்ளது.

அவருடன் ஆல்ரவுண்டர் ஷுவாகட்டா ஹோமிற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட மெஹ்முதுல்லா ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த மெஹதி ஹாசன், தன்பீர் ஹெய்டர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தமீம் இக்பால், 2. சவுமியா சர்க்கார், 3. இம்ருல் கெய்ஸ், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. ஷாகிப் அல் ஹசன், 6. சபீர் ரஹ்மான், 7. மெஹ்முதுல்லா, 8. மொசாடெக் ஹொசைன், 9. மோர்தசா, 10. முஸ்டாபிஜூர் ரஹ்மான், 11. ருபெல் ஹொசைன், 12. தஸ்கின் அஹமது, 13. சுபாஷிஸ் ராய், 14. சன்ஷாமுல் இஸ்லாம், 15. ஷுவாகட்டா ஹோம், 16. நூருல் ஹசன்.