மயிலிட்டி மண்ணின் விழுதொன்றின் குரல்

இலங்கையின் வடக்கே  மிகவும் பெரிய மீன்பிடி துறைமுகமாக காணப்பட்ட மயிலிட்டித்முறைமுகம்,
இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மீன்பிடித்தொழிழில் நாட்டின் முன்னனியாக விளங்கியது.

 ஆனால் தற்போது    எமது மயிலிட்டி கிராமம்
எந்தவித பயனுமில்லாமல் இராணுவத்தினர் வசமுள்ளது.

எமது கிராமம் மீன்பிடியில் மட்டுமல்லாது விவசாயத்திலும் மிகவும் சிறந்து விளங்கியது அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ரானுவத்தினர் அங்கே விவசாயம் செய்கின்றதை அறியமுடிகிறது..

Advertisement

 ஆரம்பகாலத்தில்  கால்பந்து விளையாட்டிலும் யாழ்மாவட்டத்தில் முன்னணியாக இருந்த து மட்டுமல்லாமல் இலங்கை தேசிய அணியில்கூட மயிலிட்டியை சேரந்த வடிவேஷ்வரன் அவர்கள் இடம்பெற்றிருந்தார் என்பது யாவரும் அறிந்த்தே.

ஆனால் தற்போது சொந்த மைதானமில்லாமலே எமது வீரர்கள் பல போட்டிகளில் பங்குபற்றிவருகின்றனர் எனினும் வெவ்வேறு பகுதிகளிலும் எமது மக்கள் வாழ்ந்துவருவதால் விளையாட்டிலும்சரி ஏனைய  நிகழ்வுகளிலும் சிறந்தமுறையில் பங்கபற்ற முடியவில்லை.

 அத்துடன் எமது மண்ணிலே இருந்த மிகப்பெரிய கிறிஸ்தவ ஆலயமான காணிக்கமாதா ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது அருகாமையிலிருந்த பிள்ளையார் ஆலயம் இருந்த இடம் தெரியாமலே போய்விட்டது.

எனவே தற்போதைய நிலையிலே நாம்அனைவரும் இணைந்து மண்ணை மீட்க வேண்டியது கட்டாயமானதொன்றாகும்.

எமதுமக்கள் ஜீவனோபாயத்திற்காக எத்தனையோ இன்னல்களின் மத்தியிலும் ஆங்காங்கே சிதறிவாழ்ந்துவருகிறார்கள்.

எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் எந்தவித பயனுமில்லாமல் தற்போது நல்லாட்சி அரசாலும் ஏமாற்றப்பட்டு இருக்கும் எமது மக்கள் எம்மண்ணை வந்தேறு படைகளிடமிருந்து மீட்டெடுக்க எதிர்வரும் நாட்களில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது  அதற்கிடையில் மீள்குடியேற்றகுழுவினர் மீண்டும் ஒரு மாதகால அவகாசம் கேட்டு ஜனாதிபதிக்கு மனு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

எத்தனையோ தடவை இவ்வாறு மனுவழங்கியும் எந்தவித பதிலும் வழங்கவில்லை ,  அதுமட்டுமன்றி கடந்த 4 ம் திகதி யாழ்வந்த ஜனாதிபதி வீதியில் போராட்டம் நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.

எனவே நேரடியாக அவராால்அவதானிக்கப்பட்ட போராட்டத்தையே கண்டுகொள்ளாமல் போன ஜனாதிபதிக்கு மனு அனுப்புவது எந்தவகையில் வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறி !  அதுமட்டுமன்றி ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருடம் அவகாசம் வழங்க எமது அரசியல்கட்சிகள் இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே நல்லாட்சி என்று சொல்லி நாடகமாடும் அரசை நம்பி இருக்காமல்  எமது கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தினர் மற்றும் மீழ்குடியேற்ற குழுவினர் ,பொதுமக்கள்,புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் என அனைவரும் ஒன்றினைந்து மிகவிரைவாக சாத்வீகப்போராட்டத்தை ஆரம்பித்து மண்ணைமீட்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் வேண்டிநிற்கிறேன்… மயிலிட்டி மண்ணின்  விழுதொன்றின் குரல்