Home யாழ் செய்தி மயிரிழையில் உயிர் பிழைத்த நபர்

மயிரிழையில் உயிர் பிழைத்த நபர்

யாழ்ப்பாணம் – தச்சன் தோப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்படட முச்சக்கரவண்டி ஒன்று கொழும்பிலிருந்து வந்த கடுகதி ரயிலுடன் மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுடன் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
மேலும் முச்சக்கரவண்டியில் யாரும் பயணிக்காத நிலையில்,  வாகனம் முற்றிலும் பாவனைக்கு உதவாத வகையில் நொறுக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.