Home உள்ளூர் செய்தி இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்காலத் தண்டனை

இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்காலத் தண்டனை

போதைப்பொருளினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தர்மராஜ் சுசேந்திரன்,கௌதம் திரமாநந்தன் ஆகிய இருவருக்கே இன்று ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது