Home வீடியோ காப்பாற்ற சொல்லி கெஞ்சிய பணிப்பெண் – வீடியோ எடுத்த எஜமானி : அதிர்ச்சி வீடியோ…!

காப்பாற்ற சொல்லி கெஞ்சிய பணிப்பெண் – வீடியோ எடுத்த எஜமானி : அதிர்ச்சி வீடியோ…!

தற்கொலை செய்ய முயன்ற தனது வீட்டுப் பணிப்பெண்ணை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதை ஒளிப்பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்த வீட்டு உரிமையாளரான பெண்ணை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர் தற்கொலைக்கு முயன்ற அந்த கறுப்பின பணிப்பெண், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. எனினும், தான் விழுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது. எவ்வாறெனினும், ஜன்னல் கண்ணாடிச் சட்டகத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு உதவிக்காகக் கதறினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த வீட்டு எஜமானி, அவருக்கு உதவி செய்யாமல் அந்தக் காட்சியைப் படம்பிடித்ததுடன், “என்ன பைத்தியக்காரத்தனம்? மேலே எழும்பி வா” என்றும் கூறினார்.

இதற்கிடையில், ‘என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கத்திய அந்தப் பணிப்பெண்ணின் கை நழுவவே கீழே விழுந்தார். அப்போதும் ஒளிப்பதிவைக் கைவிடாத அந்த எஜமானி, அவர் விழுவதையும் படமாக்கினார். இந்தக் காட்சியை அவர் இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார். இச்சம்பவத்தையடுத்து குறித்த எஜமானியை பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலை முயற்சியாக இருக்கலாமா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். எவ்வாறெனினும், ஏழாம் மாடியில் இருந்து விழுந்த அந்தப் பணிப்பெண், தெய்வாதீனமாக சில காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.