அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் ! தடுப்பு மருந்தும் இல்லை -அவதானம்

இலங்கையில் அண்மைக்காலமாக அச்சுறுத்தலாக மாறியுள்ள இன்புளூவென்சா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள மருந்துகள் இல்லையென தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னர் ஓரளவு மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், குறித்த மருந்து பொருட்கள் முடிந்து விட்டதாகவும், வைத்திய ஜெனரால் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த மருந்து பொருட்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மருத்து பொருட்கள் அதிக விலையை கொண்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த நோய் நிலைமை தொடர்பில் அதிகம் அச்சப்பட தேவையில்லை என வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியரிடம் செல்லுமாறும், அதன் போது இலகுவாக கட்டுப்படுத்தி விடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.