Home புலனாய்வு செய்தி புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் படகு மூலம் இலங்கைக்குள்

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் படகு மூலம் இலங்கைக்குள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு சந்திவெளி பகுதிக்கான புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயந்தனின் வருகை தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இது குறித்து புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருந்திருப்பதாகவும் திவயின மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் மீனவ படகு ஒன்றின் மூலம் மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளாகவும் மன்னாரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஒரு தொகை பணத்தை எடுத்துச் செல்லும் நோக்கத்தில் இவர் வந்திருக்கலாம் எனவும் மேற்படி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.