தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் வியக்க வைக்கிறது! கனடா பிரதமர் பெருமிதம்!

சமீபகாலமாக உலக மக்களின் பாராட்டை பெற்று வருகிறார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ. அனைத்து மக்கள் மீதும் அன்பும், ஆதரவும் கொடுத்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அகதிகளை விரட்டியடித்த போது கனடாவிற்கு வாருங்கள் நான் இருக்கிறேன் என்று அழைத்து அவர்களது துயரத்தில் பங்கு கொண்டவர்.

தமிழகம் குறித்து அவர் கூறுகையில், கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதனாலேயே தமிழர்களின் மீது ஒருவித ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். மேலும் கனடா நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி வியக்க வைத்தார் ஜஸ்டின் ட்ரூட்டோ.

ஜஸ்டின் ட்ரூட்டோ தமிழில் வாழ்த்து கூறியது வலைத்தளங்களில் பரவியது. இதனால் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ.

அதே போல தமிழர்கள் நடத்தும் கலாச்சார பண்பாட்டு விழாக்களுக்கு கனடாவில் வாழும் தமிழர்கள் அவருக்கு அழைப்பு விடுக்க தவறுவதில்லை. அதேபோல பிரதமரும் அந்த விழாக்களில் பங்கெடுக்கவும் தவறுவதில்லை. மிகவும் ஆர்வமுடன் பங்கேற்று வாழ்த்துவார்.