Home சர்வதேச செய்தி மேலும் 2 போர் கப்பலை வட கொரிய கடலுக்கு அனுப்பிய டொனால் ரம்.. திக்.. திக்...

மேலும் 2 போர் கப்பலை வட கொரிய கடலுக்கு அனுப்பிய டொனால் ரம்.. திக்.. திக் நிமிடங்கள்

வடகொரிய கடலில் ஏற்கனவே சுமார் 8 போர் கப்பலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ள நிலையில். இதனை பார்த்து நாம் அஞ்சமாட்டோம் என்றும். ஒரு அடி முன்னர் வைத்தால் கூட உடனே தாக்குதல் நடத்துமாறும், வட கொரிய அதிபர் தனது கடல் படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மேலும் ஆத்திரமடைந்த அமெரிக்கா மேலதிகமாக 2 அதி நவீன போர் கப்பல்களை அனுப்பியுள்ளது. இக் கப்பல்களில் நாச கார விமானப்படை உள்ளதோடு.

கப்பலில் இருந்து தரைக்கும் தாக்குதல் நடத்த முடியும். இதனால் வட கொரிய கடல் எல்லையில் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது. இந்த 2 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டு படை , சற்று மித மிஞ்சிய விதமாக நடந்துகொண்டாலும் உடனே போர் மூழும் அபாயம் உள்ளது. இந்த பதற்றத்தை தவிர்க்க பல நாடுகள் சமாதானம் பேச எத்தணித்து வருகிறது. ஆனால் வட கொரிய அதிபர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை வட கொரிய அதிபரின் பாதுகாப்பு பன் மடங்காக அதிகரிக்கபப்ட்டுள்ளது. அவரை சுற்றி ஆயிரத்திற்கும் அதிகமான விசேட படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதோடு. அவரை ரகசியமான இடம் ஒன்றுக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க திட்டத்தின் படி. அன் நாடு மீது விமானத் தாக்குதல் நடத்தி. அன் நாட்டு அதிபரை கொல்வதே. இதனை வட கொரியா நன்றாக அறிந்து வைத்துள்ளது என்கிறார்கள்.