Home சர்வதேச செய்தி சற்று முன் அமெரிக்க போர் விமானம் வட கொரிய எல்லையில்: மோப்பம் பிடிக்கும் பிளேன்

சற்று முன் அமெரிக்க போர் விமானம் வட கொரிய எல்லையில்: மோப்பம் பிடிக்கும் பிளேன்

அமெரிக்காவின் அதி நவீன போர் விமானங்களில் ஒன்றான மோப்பம் பிடிக்கும் விமானம் சற்று முன் வட கொரிய எல்லையில் பறந்து வேவு பார்பதில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. ஜப்பான் கடலுக்கு அப்பால், சர்வதேச கடல் பரப்பில் அமெரிக்க விமானம் பறந்தாலும். அது வட கொரியாவில் உள்ள அணு ஆயுத தளங்களை வேவு பார்த்துள்ளது.

குறித்த விமானத்தில் அணு அயுதங்களை கண்டறியும் திறன் படைத்த சக்த்தி வாய்ந்த கருவிகள் உள்ளது. ஒரு நாட்டுக்கு மேல் பறக்காமல் பல மைல் தொலைவில் பறந்தாலும், அது அணு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து விடும். பொதுவாக அணு ஆயுதத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்னும் கதிரியக்க பொருள் உள்ளது. இதன் கதிரியக்கத்தை மிகவும் துல்லியமாக அறிந்துவிடும் இந்த அமெரிக்க விமானம்.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக அணு ஆயுதத்தை நகர்த்தி இருந்தால் கூட. அது சென்ற பாதையை கூட மிக மிக துல்லியமாக அறியும் திறன் கொண்டது இந்த அமெரிக்க வேவு விமானம். WC 135 என்று அழைக்கப்படும் இந்த விமானத்தில் இல்லாத கருவிகளே இல்லை. அதி திறன் கொண்ட இந்த விமானத்தை அமெரிக்கா வேவு பார்க்க அனுப்புயுள்ளது என்றாலே, அன் நாடு மீது எக் கணமும் போர் மூழலாம் என்று கூறலாம்.