போருக்கு தயார்! பீரங்கி படை தாக்குதலை அதிரடியாக நடத்தி காட்டிய வட கொரியா

அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் என கூறும் வகையில் படுபயங்கரமான பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னிலையில் வட கொரியா ராணுவம் இன்று நடத்தியுள்ளது.

வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

மேலும், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் என பீதியை கிளப்பி வருகிறது.

Advertisement

வட கொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

போர் கப்பல்களை எதிர் கொள்ள தயார் என கூறும் வகையில் அது வட கொரியாவுக்கு வந்து சேரும் முன்னர் அந்நாடு வரலாறு காணாத வகையில் பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னர் நடத்தியுள்ளது.

இந்த பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றது.

கரையோரத்தில் 300 பெரிய துப்பாக்கி சுழற்சிகளால் இயக்கப்படும் துப்பாக்கி பீரங்கிகளிலிருந்து நெருப்புகள் பாய்ந்தது

வட கொரியாவின் 85வது ராணுவ வருடத்தை கொண்டாடும் விதத்திலும் இது நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது பீராங்கியிலிருந்து நெருப்பு குண்டுகள் சீறி பாய்ந்தன.

ஒவ்வொரு முறையும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலக்குகளைத் தாக்கும் போது அதை கிம் ஜாங் பாராட்டினார்.

உங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா சவால் விடவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.