Home இந்திய செய்திகள் காதலனுடன் ஓடிய மகள் – கர்ப்பிணி என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்ற பெற்றோர்

காதலனுடன் ஓடிய மகள் – கர்ப்பிணி என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்ற பெற்றோர்

7 மாத கர்ப்பிணி பெண்ணை பெற்றோரே அடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டதை சேர்ந்த தங்கராசு – பவானி தம்பதியின் மகள் சர்மிளா. இவர் அதே பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். சர்மிளாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2008ம் ஆண்டு, அவர் தனது காதலன் கலைராஜுடன் தலைமறைவானார்.

பின்னர், சர்மிளாவை தேடி கண்டுபிடித்த அவரது பெற்றோர், அதே பகுதியை சேர்ந்த அன்புமணி என்பவருக்கு கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், அன்புமணியுடன் வாழ விரும்பாத சர்மிளா வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் கலைராஜுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவருடன் குடும்பம் நடத்தியதில் சர்மிளா கர்ப்பமடைந்ததால், கோவிலில் வைத்து கலைராஜுவை திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே, சர்மிளா கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் அவரது கருவை கலைக்க முயன்றுள்ளனர். இதற்கு அவர் சம்மதிக்காததால், சர்மிளாவை அவரது பெற்றோர் அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் மினி லாரியில் ஏற்றி பொன்பரப்பில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம் ஆடியுள்ளனர்

இந்த சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் சர்மிளாவை அவரது பெற்றோரே அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்கராசுவையும், பவானியையும் கைது செய்த போலீஸார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.