Home சர்வதேச செய்தி ரஸ்ய புலனாய்வு அதிகாரியின் தலையை துண்டித்து வீடியோவை வெளியிட்டது ஐ. எஸ். ஐ. எஸ்

ரஸ்ய புலனாய்வு அதிகாரியின் தலையை துண்டித்து வீடியோவை வெளியிட்டது ஐ. எஸ். ஐ. எஸ்

சிரியாவில் கைதுசெய்யப்பட்ட ரஸ்ய புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஓருவரின் தலையை துண்டித்துக்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஐஎஸ் அமைப்பு அது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

1945 ம் ஆண்டு நாஜிபடைகள் மீதான வெற்றியை குறிக்கும் இராணுவ அணிவகுப்புகளில் ரஸ்யா ஈடுபட்ட இன்றைய தினத்தில் ஐஎஸ் அமைப்பு குறிப்பிட்ட 12 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது.

கறுப்பு உடையணிந்த நபர் ஓருவர் மண்டியிட்டு அமர்ந்திருப்பதையும் ரஸ்யாவின் ஏனைய புலனாய்வு பிரிவினரை சரணடையுமாறு அவர் கோருவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

இராணுவசீருடை அணிந்த நபர் ஓருவர் குறிப்பிட்ட நபரின் தலையை துண்டித்துக்கொலை செய்வதையும் வீடியோ காண்பித்துள்ளது.

வீடியோவின் உண்மை தன்மை இன்னமும் உறுதிசெய்யப்படாத அதேவேளை ரஸ்யா தனது படைவீரர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை மறுத்துள்ளது.