Home வீடியோ இந்தியாவிடம் தோல்வி விரக்தியில்… டிவி பெட்டியை உடைத்த பாகிஸ்தானியர்கள் – வீடியோ!

இந்தியாவிடம் தோல்வி விரக்தியில்… டிவி பெட்டியை உடைத்த பாகிஸ்தானியர்கள் – வீடியோ!

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரிட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி 124 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் விரக்தியில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் ஆங்காங்கே தொலைகாட்சி பெட்டியை சாலையில் தூக்கி போட்டு, கல்லால் அடித்தும் சுக்குநூறாக உடைத்தனர்.

அதே போல பாகிஸ்தானில் உள்ள ஒரு ரசிகர் அந்த அணி தோல்வியடைந்த செய்தியை டிவியில் பார்த்து விட்டு திடீரென கோபமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் தடுத்தும் அதை கேட்காமல் தன்னிடம் இருந்த சுத்தியலை எடுத்து தன் வீட்டு தொலைகாட்சி பெட்டியை கோபத்தில் அடித்து உடைத்தார். அதே போல பாகிஸ்தானை இந்தியா வென்ற உடன் கோபத்தில் ஒருவர் பித்தளை சொம்பை வைத்து ஓங்கி அடித்து டிவியை உடைத்தார். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது –